Sani Peyarchi Palangal in Tamil (சனி பெயர்ச்சி பலன்கள்)2015-2017

0
Sani Peyarchi Palangal

Sani Peyarchi Palangal in Tamil (சனி பெயர்ச்சி பலன்கள்)2015-2017

Sani Peyarchi Palangal

நவ கிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெட்டவராகவும் உலக மக்கள் அனைவரும் பயந்து பணிந்து பக்தியுடன் வணங்கப் பெறுபவராகவும் திகழ்பவர் சனீஸ்வர பகவான் ஆவார். பொதுவாக குரு மற்றும் சனி பெயர்ச்சி அனைவராலும் ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் பன்னிரெண்டு ராசியில் பிறந்த அன்பர்களுக்கு ஏற்படக்கூடிய பலன்களை காண்போம்.

2014 சனி பெயர்ச்சி பலன்கள் நவ.02, 2014 முதல், அக். 25, 2017 வரை

வானியலில் சனி: நம் முன்னோர்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களையும் அறிந்திருந்தனர், இவை நம் கண்ணுக்கு தெரியக் கூடிய கிரகங்கள் ஆகும். இந்த ஏழு கிரகங்களில் சனிக்கு மட்டும் சனைச்சரன் என்று பட்டம் அளித்ததிலிருந்து சனியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். சனி பிற கிரகங்களை விட மிகவும் மெதுவாக நகர்கிறது. சனி பூமிக்கு அப்பால் சுற்றும் வெளிவட்ட கிரகமாகும். இது சூரிய மண்டலத்தில் கடைசி கிரகமாகும். சூரியனிலிருந்து மிகவும் தொலைவில் சுற்றி வருகிறது. சனி நீல நிற பந்து போன்றும் மூன்று பொது மையம் கொண்ட மஞ்சள் நிற வளையங்களால் சூழப்பட்ட நிலையில் இருக்கிறது. இந்த வளையங்கள் தனித்தனியாக உள்ளன. இரு வளையங்களுக்கிடையே கருமையான இடைவெளி உள்ளது.

2014 சனி பெயர்ச்சி பலன்கள் நவ.02, 2014 முதல், அக். 25, 2017 வரை

சனி சூரியனிலிருந்து 886 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது குறுக்களவு 75000 மைல்களாகும். சனியை பூமியுடன் ஒப்பிடும் பொழுது 700 மடங்கு திண்மையுடையதாகவும் பூமியை விட 100 மடங்கு எடையில் குறைந்ததாகவும் இருக்கிறது. நம் பூமிக்கு ஒரு சந்திரன் இருப்பது போல சனியை ஒன்பது சந்திரன்கள் சுற்றி வருகின்றன. சனி ஒரு முறை சூரியனை சுற்றி வர ஏறத்தாழ இருபத்து ஒன்பதரை வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. எனவே சனி ஒவ்வொரு ராசியையும் கடந்து செல்ல இரண்டரை வருடங்களை எடுத்துக் கொள்கிறது. புராணத்தில் சனி: புராணத்தில் சனி எமன் என்று அழைக்கப்படுகிறார். சிவன் அம்சமான ருத்திரனின் செயலை சனி செய்கிறார். பனி போன்ற குளிர்ச்சியான கைகள் கொண்டுள்ளவர் என்றும் கூறப்படுகிறது அதாவது ஒருவர் இறந்துவிட்டாரென்றால் அவரது உடல் குளிர்ந்துவிடும் என்பதை இது காட்டுகிறது. தீய பலங்களை தருகின்ற குளிகன், மாந்தி ஆகியோருக்கு சனி தந்தையாகிறார். சனி நீல நிறமாக இருப்பதால் நீலன் என்றும் மெதுவாக செல்வதால் மந்தன் என்றும் முடவன் என்றும் அழைக்கப்படுகிறார். சனியின் ஆதிக்கம் மிக்கவர்கள் மந்தமாக செயல்படுவார்கள் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

2014 சனி பெயர்ச்சி பலன்கள் நவ.02, 2014 முதல், அக். 25, 2017 வரை

ராவணனின் மகன் இந்திரஜித் பிறக்கும் நேரத்தில் எல்லா கிரகங்களும் இந்திரஜித்தின் ஜாதகத்தில் லக்கினத்திற்க்கு பதினொன்றாவது பாவகத்தில் அமரும் வகையில் ராவணன் திட்டமிட்டிருந்தார். ஜோதிடவியலில் லக்கினத்திற்கு பதினொன்றாம் பாவகம் என்பது ஜாதகரின் ஆசை, விருப்பம் போன்றவை நிறைவேறுவதற்கு துணை புரியும் பாவகமாகும். பதினொன்றாவது பாவகத்தில் இருந்த சனி தன் காலை பன்னிரெண்டாம் பாவகத்தில் நீட்டிக் கொண்டார்.

Sani Peyarchi Palangal

ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்திற்கு பன்னிரெண்டாம் பாவகத்தில் சனி இருந்தால் ஜாதகருக்கு அற்பாயுள் என்று கூறப்படுகிறது.ராவணனுக்கு மகன் பிறந்துள்ளதாக தகவல் தெரிவித்தவுடன் அவர் எல்லா கிரகங்களும் இந்திரஜித்தின் ஜாதகத்தில் பதினொன்றாவது பாவகத்தில் இருக்கிறதா என்பதை நிச்சயம் செய்துகொள்ள விரும்பினார் அப்பொழுது சனி தன் கால பன்னிரெண்டாவது பாவகத்தில் நீட்டிக் கொண்டிருப்பதை கண்டார். மித மிஞ்சிய கோபத்திற்கு வசப்பட்ட ராவணன் உடனே சனியுடைய காலை துண்டித்து விட்டார். எனவே சனி முடவன் என்று அழைக்கப்படுகிறார்.

சூரியனின் மகன் சனி சனி சூரியனுடைய மகன் ஆவார். சனி சூரியனுடனும் சந்திரனுடனும் ஒத்துப்போவதில்லை இதன் காரணமாகத்தான் ஒளிரும் கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனுக்குறிய ராசிகளுக்கு நேர் எதிரில் உள்ள மகரம் மற்றும் கும்பம் ராசிகள் சனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன இவை இருள் ராசிகள் என்று ஆதியில் குறிப்பிட்டனர். மேற்கத்திய ஜோதிடத்தில் சனி யுரேனசின் மகன் என்று கூறுகிறார்கள். சனி ரேஹா என்பவரை மணம் புரிந்துகொண்டார் தனக்கு பிறக்கும் குழந்தைகள் உலகத்தை ஆளும் என்பதை தெரிந்துகொண்டு அவைகளை அழித்தார்.

சனிக்கு நேர்மாறான குணத்தை கொண்ட குரு ஒருவருக்கு தொடர்ந்து வாழ்வளிக்கக்கூடியவர். எனவே குரு பிறந்தவுடன் குரு வம்சத்தை அழிக்கவந்த சனியிடம் குருவின் தாயார் ஒரு கடினமான பொருளை ஒரு துணியில் சுற்றி இது தான் குரு எனக் கொடுத்தார், அதை சனி அழித்தார் அதனால் தான் குரு பிழைத்தார். கடவுள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் பாணியிலேயே பதிலளிக்கிறார். சனி தன் தந்தையான யுரேனசை ஆட்சி இழக்கச் செய்தார், பதிலுக்கு குரு சனியை ஆட்சி இழக்க செய்து இயற்கையின் விதிமுறைகளை கற்பித்தார். இது போன்று பல புராணக் கதைகள் வழங்கப்படுகின்றன. சிவனின் குணங்களைப் பெற்ற சனி சிவனுடைய கடமைகளை செய்கிறார்.

சனி நீலன் என்றும் சிவன் நீலகண்டன் என்றும் அழைக்கப்படுகின்றனர். சனி பிப்ரவரி-மார்ச் மாதங்களை குறிக்கும் சிசிர ருதுவை ஆள்கிறார். இவை சனியை குளிர்ச்சியான மாதங்கள் ஆகும். ஜோதிடத்தில் சனி: சனி ஒரு வறண்ட குளிர்ச்சியான கிரகம். ராசி மண்டலத்தில் மகரம், கும்பம் ஆகிய இரு ராசிகளை சொந்த ராசிகளாக பெற்றுள்ளது இவ்விரு ராசிகளில் கும்பத்தை மூலத்திரிகோண ராசியாகக் கொண்டுள்ளது. பகல் நேர ராசி கும்பம் என்றும் இரவு நேர ராசி மகரம் என்றும் கூறப்படுகிறது.

சனி சூரியனின் மகன் என்று புராணங்கள் கூறினாலும் சூரியனின் ராசிக்கு எதிர் ராசியை ஆட்சி செய்கிறார். சனி பூரண பலம்-உச்ச பலம்-பெறும் ராசி துலாம், இங்கு சூரியன் மிகவும் பலவீனம்-நீசம்-பெறுகிறார். சனி மிகவும் பலவீனம்-நீசம்-அடையும் ராசி மேஷம் இங்கு சூரியன் பூரண பலமான உச்சம் பெறுகிறார். சூரியனுக்கு சொந்தமான சிம்மம் ராசியிலும் சந்திரனுக்கு சொந்தமான கடகம் ராசியிலும் சனி பகை நிலை அடைந்து பலம் குறையும் நிலையில் தீய பலன்களையும் சுக்கிரனுக்குறிய ரிஷபம் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனி யோகாதிபதியாகி உன்னத பலன்களையும் அளிக்கிறார்.

ராசி மண்டலத்தில் அமைந்துள்ள இருபத்தியேழு நட்சத்திரங்களில் பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் சனியின் நட்சத்திரங்கள் ஆகும். இந்த மூன்று நட்சத்திரங்களில் உள்ள கிரகங்கள் ஜாதகத்தில் சனி இருக்கும் இடம் பெற்ற ஆதிபத்தியம் ஆகியவற்றுக்கு தக்கவாறு பலன்களை அளிக்கின்றன. சனியின் தசா ஆண்டுகள் பத்தொன்பது ஆண்டுகளாகும்.

உற்பத்திக்கும் விரிவாக்கத்திற்கும் காரணகர்த்தா குரு. குரு உற்பத்தி செய்வதை சனி அளித்து சமநிலையை உண்டாக்குகிறார். சனி ஒரு குளிர்ச்சியான கிரகம் எனவே சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் எல்லாவற்றிலும் குளிர்ச்சியை விரும்புவார்கள் மேலும் கசப்பு, துவர்ப்பு மற்றும் புளிப்பான பொருட்களையே விரும்புவார்கள். பகலில் பிறந்தவர்களுக்கு சூரியன் தந்தை எனவும் இரவில் பிறந்தவர்களுக்கு சனி தந்தை எனவும் சில ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அவரவர்கள் கர்மவினைக்கு தக்கவாறு சனி சொர்க்கதிற்க்கோ நரகத்திற்க்கோ அனுப்புகிறார். சனி சுத்தமான நீலத்தை ஆளுகிறார். மேற்கத்திய ஜோதிடத்தில் சனி கருப்பு, கரும் பழுப்பு மற்றும் நீல நிறத்தை ஆளுவதாக கூறப்படுகிறது..

சனி சுரங்க கனிமப் பொருட்கள், குகைப் பாதை, சுடுகாடு, கரி போன்றவைகளை குறிக்கிறார். சனி விளை நிலங்களையும் பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் நிலக்கடலை போன்ற தாவர வகைகளையும் குறிக்கிறார். நீண்ட காலம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய மற்றும் குணப்படுத்த முடியாத நோய்களை சனி கொடுக்கிறார். குறிப்பாக எலும்பு, தேமல், காக்காய் வலிப்பு, வாதம் போன்றவற்றிற்கு சனி காரணமாகிறார். மேலும் சனி ஒருவரின் ஆயுளுக்கு பொறுப்பேற்கிறார்.

சனியின் தலம் திருநள்ளாறு இங்கு சனியின் கதிர்வீச்சுகள் மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சனியின் தேவதை எமன், கருங்குவளை மலரைக் கொண்டு வழிபட்டால் சனி மனம் மகிழ்வார். இவரது தானியம் எள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கருப்பு பட்டு, விருட்சம் வன்னி மரம், மேற்கு திசைக்குறியவர், பஞ்சபூத தத்துவத்தில் காற்று தத்துவத்தை குறிப்பவர் ஆவார். சனி ஜாதகத்தில் தான் இருக்கும் இடத்திலிருந்து மூன்று,ஏழு,பத்து ஆகிய இடங்களை பார்ப்பார்.

கோசார சனியின் ஸ்தான பலன்கள்:

வான் மண்டலம் பன்னிரெண்டு ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்கிறார். கோச்சாரத்தில் ஜாதகரின் ராசிக்கு மூன்று,ஏழு,பதினொன்று ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களை தருவார். ஜாதகரின் ஜன்ம ராசிக்கு பன்னிரெண்டாவது ராசி, ஜன்ம ராசி, ஜன்மராசிக்கு இரண்டாவது ராசி ஆகிய ராசிகளில் சனி சஞ்சரிக்கும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் என்ற கணக்கில் ஏழரை சனி என்று அழைக்கப்படுகிறது. இதில் ஜன்ம ராசியில் சனி சஞ்சரிப்பதை ஜன்ம சனி என்று அழைக்கப்படும். ஏழரை சனி காலத்தில் ஜன்ம சனியே அதிக தீய பலனை தரும்.

Click on the following link to access how this Sani Peyarchi will impact you in the coming year from Nov 2014 – Oct 2017.

 

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

சனி பெயர்ச்சி பலன்கள் தமிழ்

Also Read

PREDICTIONS ABOUT FUTURE OF INDIA AND THE WORLD

Daily Horoscopes

2016 Horoscope – Vedic Astrology New Year Predictions

Chinese Zodiac Predictions for 2016

Annual Numerology Predictions 1 to 9 for 2016

GURU PEYARCHI PALANGAL (JUPITER TRANSIT) 2015-2016

Tamil New Year 2015 Rasi Palan

27 Nakshatra Rasi Palan for 2015 in Tamil Panchangam

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Sani Peyarchi Palangal in Tamil

Tamil Astrology

Continue to next page…..

1 2 3 4 5

No comments