Ragu Kethu Peyarchi Simmam Rasi palan 2017 in Tamil

0
Ragu Kethu Peyarchi Simmam Rasi palan 2017

Ragu Kethu Peyarchi Simmam Rasi palan 2017 in Tamil

Ragu Kethu Peyarchi Simmam Rasi palan 2017 in Tamil.  Rahu moving onto your 12th house and Ketu moving onto your 6th house can provide significant relief. maintain a good relationship with your partner is necessary to fulfil various endeavors of life. It is only when you understand each other, that you can make the most of your relationship.Rahu on Janma Sthanam and Ketu on your Kalathra Sthanam would have created physical ailments and problems on your relationship in the past 1.5 years  Ketu is staying in your seventh graham and it won’t move until September.

You have to be diligent about your spouse and your business partner. It won’t yield positive results, in case your domestic life and your work life are not balanced. So, make sure that you keep things good around you.upcoming transit of Jupiter and Saturn is not looking great. It can create more personal and relationship problems. But you will get good relief on your health, career and finance. You will always stay one step ahead of your opponents. so, can create setback on relationship in the current Rahu transit. You will also prosper in academics. You may suffer a chronic disease, which may prolong your sufferings.

Ragu Kethu Peyarchi Simmam Rasi palan 2017

சிம்மராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்

இதுநாள்வரை ஜென்ம ராசியில் அமர்ந்து மனசஞ்சலத்தை தந்து வந்த ராகு வரும் 27.07.2017 முதல் 12ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் கூடுதலான அலைச்சல் உண்டாகும் என்றாலும் நல்ல தனலாபம் உண்டு. வேலைப் பளு கூடுவதால் சற்று சுகத்தினை இழக்க நேரிடும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். யோசிக்காமல் செய்யும் முதலீடுகளில் தனநஷ்டத்தினை சந்திக்க நேரிடும். அதிக லாபத்திற்கு ஆசைப்படாமல் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இன்சூரன்சு துறைகளில் சேமிப்பது நன்மை தரும். இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

அடிக்கடி தொலைதூரப் பிரயாணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.ஒரு சிலருக்கு அயல்நாட்டுப் பயணத்திற்கான வாய்ப்பு உண்டு. அறிவியல்துறை ஆய்வாளர்கள் தங்கள் பணியில் ஓய்வில்லாமல் செயல்பட வேண்டியிருக்கும். நண்பர்களுக்காக பிரதிபலன் எதிர்பாராது உதவி செய்யும் சூழல் உருவாகும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கனவுத் தொல்லைகள் அவ்வப்போது வந்து போகும். ராகுவின் இடமாற்றம் உங்கள் வேகத்தினைக் குறைக்கும். உங்களது பொறுமை எதிரிகளை நிலைகுலையச் செய்யும். உங்களது அதிரடி நடவடிக்கையை எதிர்பார்த்துக் காத்திருப்போர் ஏமாந்து போவார்கள். பொறுமை காப்பதனால் மட்டுமே நீங்கள் பின்னாளில் தலைமைப் பொறுப்பு ஏற்று செயல்பட இயலும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வழக்கு வியாஜ்ஜியங்களில் சமாதானமாகப் போவது நல்லது. வேகத்தினைவிட விவேகமே சிறந்தது என்பது அனுபவப் பாடங்களின் மூலம் நன்கு விளங்கும். நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதால் உங்கள் கௌரவம் எந்தவிதத்திலும் பாதிப்பிற்கு உள்ளாகாது. மாறாக உங்கள் பெருமையும் புகழும் கூடும். பொறுமையுடன் இருந்தால்தான் நற்பலனை அனுபவிக்க இயலும். அவசரப்பட்டால் இழப்புதான் மிஞ்சும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுநாள் வரை 7ம் இடத்தில் இருந்து வந்த கேது விலகுவதால் மனதில் இருந்து வந்த ஒருவித அச்சம் அகலும். ஆறாம் இடத்தில் அமருகின்ற கேது பகவான் எதிரிகளை நாசம் செய்வார். தான்
அமரும் இடத்தின் வலிமையைக் குறைப்பவர் கேது என்பதால் கடன் பிரச்னைகள் குறையும்.

நீண்டநாள் வியாதிகள் குணமடையும். உடல் ஆரோக்யம் பெறும். அடுத்தவர்களுக்குக் கீழ் அடிமைத் தொழில் செய்து வந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி சுயமாகத் தொழில் செய்யும் நிலை உருவாகும். எவர் ஒருவரையும் சார்ந்திருக்காது தனித்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் குறிப்பிடும்படியான பாத்திர பண்டங்கள் சேர்வதோடு, தங்கம், வெள்ளி முதலான ஆபரணப் பொருட்களும் வந்து சேரும். ஜனன ஜாதகத்தில் கேதுவின் வலிமை இருக்கப் பிறந்தவர்களுக்கு கேதுவின் அனுக்கிரகத்தால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் ராகு பகவான் சற்று அலைச்சலைத் தந்தாலும் கேது அதற்குண்டான நற்பலன்களைத் தந்து உங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்துவார்.

பரிகாரம்:

வருகின்ற ஒன்றரை வருட காலத்திற்கு பிரதி தமிழ் மாதத்தில் வருகிற முதல் ஞாயிற்றுக்கிழமை நாளன்று அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ளவும். நேரம் கிடைக்கும்போது கும்பகோணத்தை அடுத்துள்ள திருபுவனம் திருத்தலத்திற்குச் சென்று சரபேஸ்வரரை தரிசித்து அர்ச்சனை செய்து கொள்ள மன சஞ்சலம் நீங்கும்.

Click on the following rasi/sign to know your Ragu Kethu Peyarchi Rasi palangal, i.e. how this Jupiter Transit will impact you from Juli 2017

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

Also Read

2017 Horoscope – Vedic Astrology New Year Predictions

Annual Numerology Predictions 1 to 9 for 2017

Rahu ketu peyarchi 2017 Rasi palangal Overview in Tamil

Puthandu Rasi Palan Tamil New Year 2017 – Dhurmugi Varusham

PREDICTIONS ABOUT FUTURE OF INDIA AND THE WORLD

Daily HoroscopesWeekly HoroscopesMonthly Horoscopes

Chinese Zodiac Predictions for 2017

27 Nakshatra Rasi Palan for 2017 in Tamil Panchangam

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Sani Peyarchi Palangal in Tamil

Tamil Astrology

No comments

UP-Model-School-Recruitment-2015

UPTET Admit Card 2016 Download

UPTET Admit Card 2016 Download UPTET Admit Card 2016 Download: Basic Education council of Uttar Pradesh has recently issued the written exam admit card. For UPTET-2016 ...