Ragu Kethu Peyarchi Rishabam Rasi palan 2017 in Tamil

0
Ragu Kethu Peyarchi RISHABAM Rasi palan 2017

Ragu Kethu Peyarchi Rishabam Rasi palan 2017 in Tamil

Ragu Kethu Peyarchi Rishabam Rasi palan 2017 in Tamil : That one aspect of life that every individual is aware of is that work is the only key to prosper in life. It can buy you vivid joys of life, a healthy routine and various benefits.Rahu on your 4th house and Ketu on 10th house would have affected your career and family life to great extent in the last 19 months.  Those who bring contentment in your life is your family but they may undergo trouble this year. Spend as much time as possible with your family. But Ketu moving on your 9th house will not make you happy with materialistic life.

With the current transit of Rahu and Ketu, you will see mixed results. no surprise if you must face more obstacles and problems in the first one year. There will be more challenges on your career and finance.And you tend to lose your sensibility when September ends. Do not indulge yourself into any frivolous activity. You will go old school, But the last 6 months of Rahu Ketu transit is looking excellent. by which all you need to understand is that your thoughts will be narrow minded, do not let that happen, just push it. You may also plan to go on crusade.You will  growth and success .

Ragu Kethu Peyarchi Rishabam Rasi palan 2017 in Tamil

 ரிஷபம்ராசி   ராகு – கேது  பெயர்ச்சி பலன்கள்

ஜீவன ஸ்தானமாகிய 10ம் இடத்திலிருந்து விலகி கேது 9ம் இடத்திற்கு வர உள்ளார். இதனால் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். மனதினில் அவ்வப்போது விரக்தியான எண்ணங்கள் இடம்பிடிக்கும். “என்ன செய்து என்ன ஆகப்போகிறது” போன்ற வார்த்தைகளைத் தவிர்க்க இயலாது. எது ஒன்றையும் அளவுக்கதிகமாக நேசிக்காமல் அல்லது வெறுக்காமல் எதையும் ஒரே மனநிலையுடன் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். விரும்பியது கிடைக்காவிடினும், கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம். உத்யோக ரீதியாக எதிர்பாராத இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. தகப்பனாரின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

பூர்வீகச் சொத்துகளில் ஒருசில இழப்புகளைக் காண நேரிடும். பொதுநல சேவைகள், தர்ம காரியங்கள், ஆன்மிகப் பணிகள் ஆகியவற்றில் முன்நின்று செயல்படும் வாய்ப்புகள் உருவாகும்.அயல்நாட்டுப் பணிகளுக்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடிவரும். ஒருசிலருக்கு தொழில் காரணமாக குடும்பத்தினரை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ராகுபகவான் நான்காம் இடத்திலிருந்து 3ம் இடத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார். அவரது சஞ்சார நிலை மனதில் அசாத்திய தைரியத்தினை உருவாக்கும். இதனால் மனதில் வீணான பிடிவாத குணத்திற்கு இடமளிப்பீர்கள். அதிமுக்கியமாக முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் அவசரமாக முடிவெடுத்துவிட்டு பின்பு சிரமத்தினை சந்திக்க நேரலாம்.

எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் குறிப்பிடத்தகுந்த நன்மையை அடைவீர்கள். ராகுவின் சஞ்சார நிலை அறிவியல் விஞ்ஞானிகளை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். எழுத்தாளர்கள் தங்கள் பேனாமுனையின் வலிமையினால் புரட்சிகரமான சிந்தனைகளை வெளிப்படுத்தி மிகப்பெரிய தாக்கத்தினை உருவாக்குவார்கள். ராகு, சந்திரனின் வீட்டினில், அதுவும் மூன்றாவது ஸ்தானத்தில் அமர்வதால் உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு, பங்காளிச் சண்டை, சொத்துப் பிரச்னைகள் போன்றவை தலைதூக்கும் வாய்ப்பு உண்டு. வரும் டிசம்பர் மாதம் வரை உடன்பிறந்தோருக்கிடையே அநாவசியமான பிரச்னைகள் தலைதூக்கும். ராகு சற்று சிரமத்தைத் தந்தாலும் தனலாபத்தினை அளித்து பொருளாதார நிலையை உயர்த்துவார்.

ராகுவின் இடமாற்றம் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். விளையாட்டுத்துறை வீரர்கள் தங்கள் துறையில் ஜொலிப்பார்கள். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நிலுவையில் இருந்து வரும் முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, நேர்த்திக்கடன் போன்றவற்றை இந்த வருடத்தில் செய்து முடியுங்கள். குறிப்பாக அமாவாசை நாளில் முன்னோர்களுக்கான வழிபாட்டினை மறந்து விடாதீர்கள்.

பரிகாரம்:

பிரதி வெள்ளி தோறும் காமதேனுவின் படத்திற்கு பூஜை செய்து வரவும். கோபூஜை செய்து வணங்குவதில் மனநிம்மதி கிடைக்கக் காண்பீர்கள். நேரம் கிடைக்கும் போது புதுக்கோட்டையை அடுத்த திருக்கோகர்ணம் சென்று கோகர்ணேஸ்வரரையும், அரைக்காசு அம்மனையும் தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள மனத்தெளிவு காண்பீர்கள்.

Click on the following rasi/sign to know your Ragu Kethu Peyarchi Rasi palangal, i.e. how this Jupiter Transit will impact you from Juli 2017

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

Also Read

2017 Horoscope – Vedic Astrology New Year Predictions

Annual Numerology Predictions 1 to 9 for 2017

Rahu ketu peyarchi 2017 Rasi palangal Overview in Tamil

Puthandu Rasi Palan Tamil New Year 2017 – Dhurmugi Varusham

PREDICTIONS ABOUT FUTURE OF INDIA AND THE WORLD

Daily HoroscopesWeekly HoroscopesMonthly Horoscopes

Chinese Zodiac Predictions for 2017

27 Nakshatra Rasi Palan for 2017 in Tamil Panchangam

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Sani Peyarchi Palangal in Tamil

Tamil Astrology

No comments

MAKE IN INDIA

A MAJOR NEW NATIONAL PROGRAM. DESIGNED TO FACILITATE INVESTMENT. FOSTER INNOVATION. ENHANCE SKILL DEVELOPMENT. PROTECT INTELLECTUAL PROPERTY. AND BUILD BEST-IN-CLASS MANUFACTURING INFRASTRUCTURE. THERE’S NEVER BEEN ...