Ragu Kethu Peyarchi Midhunam Rasi palan 2017 in Tamil

0
Ragu Kethu Peyarchi Midhunam Rasi palan 2017

Ragu Kethu Peyarchi Midhunam Rasi palan 2017 in Tamil

Ragu Kethu Peyarchi Midhunam Rasi palan 2017 in Tamil.Rahu will be moving from your 3rd house to 2nd house and Ketu from 9th house to 8th house. the one who has always been there by your side whenever you wanted him; the man of the house, your father needs your immediate attention. Ketu on your 8th house can deliver mixed results.  , Currently Ketu is moving through your ninth graham which signifies that your father may have to go through difficult times, which may also include bad health. You have to be more aware in case he undergoes trouble. It is your time to show some affection towards your father.

 To avoid the hardships of life, you will go for a pilgrimage. Bad health of the family will bother you from time to time, your siblings could be the ones who will be affected the most. To attain peace in your life, you will take interest in spiritualism and prophecy. You will eventually enjoy its benefits. You can be the victim of unnatural disease, so be careful before you constitute trouble for yourself.Hence you will see more fortunes and success until Oct 2018 and then you will see more obstacles. You need to take care of your health.

Ragu Kethu Peyarchi Midhunam Rasi palan 2017 in Tamil

 மிதுனம்ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்

இதுநாள் வரை மூன்றில் அமர்ந்து உங்களை அதிவேகமாக இயக்கி வந்த ராகு வரும் 27.07.2017 முதல் இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். ராகு பகவான் தான் அமரும் இடத்தின் வலிமையைக் கூட்டுவார் என்ற கருத்தின்படி இரண்டாம் இடமாகிய தன ஸ்தானம் உச்ச வலிமையுடன் வரும் ஒன்றரை வருட காலமும் செயல்பட உள்ளது. பல்வேறு வழிகளில் பொருள்வரவினைக் காண உள்ளீர்கள். இந்த நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு அவ்வப்போது சேமிப்பில் ஈடுபட்டு வருவது நல்லது. அசையாச் சொத்துகள் சேரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் போக பொன் நகை ஆபரணங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியன சேரும். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்து வந்தாலும் கலகலப்பிற்குக் குறைவிருக்காது. இரண்டாம் இடத்து ராகுவினால் பேசும் வார்த்தைகளில் கடுமை வெளிப்படக்கூடும்.

நம்மையும் அறியாமல் நாம் பேசும் வார்த்தைகள் அடுத்தவர்கள் மனதினைப் புண்படுத்தக்கூடும் என்பதால் சற்று கவனத்துடன் பேசுவது நல்லது. கண்பார்வையில் தோன்றும் பிரச்னைகளை உடனுக்குடன் கவனித்து சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம். முகத்திலும், உடலிலும் உஷ்ணத்தின் காரணமாக சரும நோய்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை 9ம் இடத்தில் இருந்து வந்த கேது விலகுவதால் மனதில் இருந்து வந்த விரக்தியான எண்ணங்கள் அகலும். செய்ய வேண்டிய கடமைகளில் சிறிதும் சுணக்கமின்றி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனக் குழப்பங்கள் விலகும். அதேநேரத்தில் உங்கள் உடல்நிலையை கேது பகவான் சற்று சோதிப்பார். பித்த ரோகத்தினால் அவதிப்படுபவர்கள் உடல்நிலையில் ஆரோக்யத்தைப் பராமரிக்க உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

அதேபோல கேதுவின் எட்டாம் இடத்து வாசம் வாழ்க்கைத் துணையுடன் அவ்வப்போது கருத்து வேறுபாட்டினைத் தோற்றுவிப்பதோடு அவரது உடல்நிலையிலும் சற்று சிரமத்தினைச் சந்திக்க வைப்பார். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். ஆனாலும், குடும்பத்தில் சண்டைகளும், சச்சரவுகளும் தலையெடுக்கத் துவங்கும். குடும்பக் குழப்பங்கள் உங்கள் மன நிம்மதியைக் குலைக்கக்கூடும். அநாவசியச் செலவுகள் கட்டுப்படுத்தப்படும் அதே நேரத்தில் ஆன்மிகச் செலவுகளிலும், தான தர்ம விஷயங்களிலும் தாராளம் காட்டுவீர்கள். தான தருமங்களுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். கும்பாபிஷேகம், கோயில் திருவிழாக்கள் போன்ற பொது நிகழ்ச்சிகளில் முன்நின்று செயல்படுவீர்கள்.

மருத்துவச் செலவுகள், எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். யாருக்கேனும் கடன் கொடுத்தால் அது திரும்ப வருவது என்பது கேள்விக்குறியே. கடனாகத் தராமல் தானமாக எண்ணிக்கொண்டு கொடுத்துவிட வேண்டும். யாரை நம்பியும் எந்தவிதமான செயலையும் இந்த வருடத்தில் ஒப்படைக்க இயலாது. சிறு காரியம் முதல் பெரியது வரை அனைத்துப் பணிகளுக்கும் நீங்களே நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த செயல்களின் முடிவு உங்களுக்கு முழுமையான மன திருப்தியினைத் தராது. “தனக்கு மிஞ்சிதான் தானமும், தர்மமும்” என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சியானது உங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

பரிகாரம்:

புதன்கிழமை தோறும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்லது. நேரம் கிடைக்கும்போது திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்திற்குச் சென்று வைகுண்டவாசனை தரிசித்து பிரார்த்தனை செய்ய பலம் பெறுவீர்கள்.

Click on the following rasi/sign to know your Ragu Kethu Peyarchi Rasi palangal, i.e. how this Jupiter Transit will impact you from Juli 2017

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

Also Read

2017 Horoscope – Vedic Astrology New Year Predictions

Annual Numerology Predictions 1 to 9 for 2017

Rahu ketu peyarchi 2017 Rasi palangal Overview in Tamil

Puthandu Rasi Palan Tamil New Year 2017 – Dhurmugi Varusham

PREDICTIONS ABOUT FUTURE OF INDIA AND THE WORLD

Daily HoroscopesWeekly HoroscopesMonthly Horoscopes

Chinese Zodiac Predictions for 2017

27 Nakshatra Rasi Palan for 2017 in Tamil Panchangam

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Sani Peyarchi Palangal in Tamil

Tamil Astrology

No comments

Amarnath Yatra halted from Baltal

Yatra: CRPF goes on ‘rampage’ in Baltal after protests over ponywalla’s stabbing Troopers, cops among 2 dozen injured in clashes; Yatra suspended 2 CRPF troopers, ...