ragu kethu peyarchi masam rasi palan 2017 in tamil

0
ragu kethu peyarchi masam rasi palan 2017

Ragu kethu peyarchi masam rasi palan 2017 in tamil

Ragu kethu peyarchi masam rasi palan 2017 in tamil. Rahu will be moving from your 5th house to 4th house while Ketu from 11th house to 10th house. There are no such benefits that can satisfy a person more than receiving the acknowledgement for their hard work. Ketu is currently residing in your 11th graham of achievements and income. Nothing thrills the world more than the intelligence of an individual.  Just be more tentative towards family, they may go through some complications. Your presence makes a lot of difference in their life, value them more than anything else.This Rahu and Ketu transit is not looking good for you.You will experience positive results between Nov 2017 and Oct 2018. The rest of the period is going to be a testing period mabe.

Ragu kethu peyarchi masam rasi palan 2017

மேஷம் ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசிக்கு கேது 11ம் இடத்திலிருந்து 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்திற்கும், ராகு ஐந்திலிருந்து 4ம் இடமாகிய சுக ஸ்தானத்திற்கும் பெயர்ச்சி ஆக உள்ளார்கள்.  உங்கள் ராசிக்கு தொழிலைக் குறிக்கும் 10ம் இடத்திற்கு  கேது வர உள்ளார். ஜீவன ஸ்தானத்தில் அமரும் கேது தொழில் முறையில் சிறிது சிரமத்தினைத் தரக்கூடும். ஆயினும் சிறப்பான அனுபவங்களைத் தந்து நல்லதொரு முதிர்ச்சியினை ஏற்படுத்துவார்.  இதனால் தொழிலில் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை உருவாகும். அதோடு உங்கள் செயல்கள் குறிப்பிடத்தகுந்த நற்பெயரையும் பெற்றுத் தரும். ஜனன ஜாதகத்தில் வலுவற்ற நிலையில் கேது அமரப் பெற்றவர்களுக்கு தற்போதைய கேதுவின் சஞ்சாரம் தொழில் ரீதியாக சிறிது சுணக்கத்தினை ஏற்படுத்தலாம். எதற்கும் அசராமல் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். 

செய்ய வேண்டிய கடமைகளில் சிறிதும் அலட்சியம் காட்டக் கூடாது. கவனக்குறைவாக செயல்பட்டால் ஒரு சில இழப்புகள் தோன்றலாம். 4ம் இடமாகிய சுக ஸ்தானத்தில் ராகுபகவான் அமர உள்ளார். ராகுவின் சஞ்சாரம் வாழ்வியல் தரத்தினை உயர்த்தும் வகையில் இருக்கும். வீடு, வாகனம், மனை ஆகிய அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் புதிதாய் சேரும். சுகஸ்தான ராகு, ஓய்வினைக் கெடுத்து, சிறிது அலைச்சலைத் தந்தாலும் அதிலும் நாம் எதிர்பார்க்கும் லாபத்தினைப் பெற்றுத் தருவார். வெளியூர் பிரயாணங்கள் அடிக்கடி செல்ல நேரிடும். ஆயினும் வாகன சுகம் என்பது இருக்கும். இயற்பியல் மற்றும் வேதியியல்துறை மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். தாயாரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 

ராகுவின் சாதகமான சஞ்சாரம் புதிய சொத்துகளைச் சேர்க்கும். ஏற்கெனவே உள்ள சொந்த வீட்டினில் பராமரிப்பு பணிகளைச் செய்வது, வீட்டினை விஸ்தரிப்பது, விலையுயர்ந்த ஃபர்னிச்சர் சாமான்களால் வீட்டினை அலங்கரிப்பது போன்ற செயல்களுக்கு நேரம் சாதகமாக அமையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உறவினர்களுக்குள் மனஸ்தாபம் உண்டானாலும் அதைப்பற்றிக் கவலைப்படாது செயல்படுங்கள். பகை கொள்ளும் உறவுகள் பின்னாளில் உண்மை உணர்ந்து மீண்டும் வந்து சேர்வர். வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக கவனம் தேவை. வாகன விபத்தினால் நஷ்டம் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளதால் நிதானம் அவசியம். புதியதாகத் தொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலினை அபிவிருத்தி செய்யவும் அரசுத் தரப்பிலிருந்து எதிர்பார்த்த உதவி கிடைப்பதோடு வங்கி ரீதியிலான கடன்தொகையும் எந்தவிதத் தடையுமின்றி வந்து சேரும். 

இந்த ராகு  கேது பெயர்ச்சி, உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும். உத்யோக முறையில் பதவி உயர்வு கண்டாலும் அங்குமிங்கும் பறந்து, திரிந்து பணியாற்ற வேண்டியிருக்கும். உடன் பணிபுரிபவர்களால் ஒரு சில சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். ஆயினும் மேலதிகாரிகளின் ஆதரவோடு செயல்பட்டு எடுத்த பணியில் வெற்றி காண்பீர்கள். பொதுத்தொண்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்நின்று செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பொதுவாக கேந்திர ஸ்தானத்தில் அசுப கிரகங்கள் நன்மையைத் தருவார்கள் என்பதால் இந்த ராகு  கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை விளைவிக்கும் வகையில் சிறப்பாகவே அமைந்துள்ளது.

பரிகாரம்:

பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் மாரியம்மன் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது சமயபுரம் சென்று மாரியம்மனை தரிசித்து அர்ச்சனை செய்து கொள்ள நன்மை உண்டாகும்.

Click on the following rasi/sign to know your Ragu Kethu Peyarchi Rasi palangal, i.e. how this Jupiter Transit will impact you from Juli 2017

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

Also Read

2017 Horoscope – Vedic Astrology New Year Predictions

Annual Numerology Predictions 1 to 9 for 2017

Rahu ketu peyarchi 2017 Rasi palangal Overview in Tamil

Puthandu Rasi Palan Tamil New Year 2017 – Dhurmugi Varusham

PREDICTIONS ABOUT FUTURE OF INDIA AND THE WORLD

Daily HoroscopesWeekly HoroscopesMonthly Horoscopes

Chinese Zodiac Predictions for 2017

27 Nakshatra Rasi Palan for 2017 in Tamil Panchangam

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Sani Peyarchi Palangal in Tamil

Tamil Astrology

No comments