Ragu Kethu Peyarchi Kanni Rasi palan 2017 in Tamil

0
Ragu Kethu Peyarchi Kanni Rasi palan 2017

Ragu Kethu Peyarchi Kanni Rasi palan 2017 in Tamil

Ragu Kethu Peyarchi Kanni Rasi palan 2017 in Tamil. Every step that you will take in your life, will yield you positive results. Many opportunities will be entertained and you will be victorious every time. Also, you will succeed in legal disputes. It can be a court case or a pending dispute at work, you will win.Rahu will be moving onto your Labha Sthanam and Ketu onto your Poorva Punya Sthanam on Aug 2017.

Ketu is present in your sixth graham and will stay there until September end. It will provide you various endeavors to outshine. You must take your decisions wisely because some agility can bring you prosperity. You need to be more resolute. Jupiter transit onto your 2nd house on Sep 11, 2017 can amplify the fortunes to great extent.

You will be successful as Ketu is in your sixth graham,You will enjoy good fortunes and be happy with the current Rahu transit. It can fulfill your materialistic desire. but you will only receive it if you will do great efforts. This will happen after September, 2017. The health of children may degrade. You will be required to pay more attention towards your family. Foreign languages and mysticism will attract you.You need to be careful between Nov 2018 and March 2019 since the malefic effects of Ardhastama sani will be more. There are possibilities that you may face issues with your partner.

Ragu Kethu Peyarchi Kanni Rasi palan 2017

கன்னிராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்

வரும் 27.07.2017 அன்று நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சி உங்கள் வாழ்வியல் நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமான மாற்றத்தினை உண்டாக்கும். ரோக ஸ்தானமாகிய 6ம் இடத்திலிருந்து கேது விலகி ஐந்தாம் இடத்தில் வந்து அமர உள்ளார். சிந்தனையைக் குறிப்பது ஐந்தாம் இடம் என்பதால் மனதில் நற்சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் கேது அருள்வார். சாஸ்திர, சம்பிரதாயங்களில் மிகுந்த ஈடுபாடு கொள்வீர்கள். மிகச்சிறந்த ஞானம் உண்டாகும். கேதுவின் துணையுடன் எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராயும் மனப்பக்குவம் தோன்றும். அதேநேரத்தில் அளவுக்கதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உங்கள் செயல் வேகத்தினைக் குறைக்கும்.

கன்னிராசி மனதில் தோன்றும் வீண் கற்பனைகளாலும், தேவையற்ற பயத்தாலும் ஒருசில நேரத்தில் இழப்புகளுக்கு ஆளாவீர்கள். ஆன்மிகச் சிந்தனை அதிகரிப்பதோடு புண்ணிய காரியங்கள், தான தர்மங்கள் போன்றவற்றில் ஈடுபட அலாதியான விருப்பம் கொள்வீர்கள். எல்லோரும் நல்லவரே என்ற எண்ணம் உங்கள் மனதினில் இடம்பிடிக்கும். சுற்றியுள்ளோரிடம் நல்லவிதமாகப் பழகுவதோடு எல்லோரிடமும் நற்பெயரை அடைவீர்கள். கேது ஐந்தாம் இடத்தில் வந்து அமர்வதால் முக்கியமாக பிள்ளைகளின் நலனில் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கன்னிராசி ராகு – கேது பெயர்ச்சி 

அவர்களது உடல்நிலையை கண்காணிப்பதோடு மனநிலையிலும் அதிக அக்கறை கொள்ளுதல் நலம். உங்களது ஆலோசனைகளும், அரவணைப்பும் அவர்களுக்குத் தேவைப்படும் நேரம் இது. ஆன்மிகப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். கேளிக்கை, கொண்டாட்டங்களில் ஈடுபட மனம் மறுக்கும். வெற்றியைத் தரும் 11ம் இடத்தில் வந்து அமரவுள்ள ராகு உங்கள் செயல்களில் அசாத்தியமான வெற்றியைப் பெற்றுத் தருவார். நினைத்தவற்றை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் இணைவதால் முன்நின்று செயல்படும் எல்லா விஷயங்களிலும் சாதகமான வெற்றியைக் காண்பீர்கள். ராகு லாப ஸ்தானத்தில் அமர்வதால் சிறப்பான தனலாபம் காண்பீர்கள்.

கன்னிராசி பல்வேறு வழிகளில் பொருள் வரவு இருந்து வரும். சேமிப்புகள் உயரும். அசையாச் சொத்துகள் சேரும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி ஆதாயம் காண்பீர்கள்.பாகப்பிரிவினை விஷயங்கள் உங்களுக்கு சாதகமான பலனைப் பெற்றுத் தரும். 11ம் இடத்து ராகு அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். தொலைதூரத்தில் பணிபுரிவோர் சொந்த ஊருக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. தாய்நாட்டிற்குத் திரும்பிவர நினைப்போருக்கு சாதகமான நேரமிது. முக்கியமான பிரச்னைகளில் பெண்களின் உதவியால் தீர்வு காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவுடன் செயல்பட்டு ஆதாயம் காண்பார்கள். வியாபாரிகள் தங்கள் நவீன உத்தியின் மூலம் சிறப்பான தனலாபத்தினை அடைவார்கள். மொத்தத்தில் வருகின்ற ஒன்றரை வருட காலமும் சிறப்பான நற்பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது.

கன்னிராசி பரிகாரம்:

புதன்கிழமை தோறும் சிவாலயத்திலுள்ள சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வைத்து ஐந்து முறை பிரதட்சணம் செய்து வணங்கி வாருங்கள். நேரம் கிடைக்கும்போது தென்காசியை அடுத்த குற்றாலத்திற்குச் சென்று அருவியில் ஸ்நானம் செய்தபின் திருக்குற்றாலநாதரை தரிசித்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ள மனத்தெளிவு காண்பீர்கள்.

Click on the following rasi/sign to know your Ragu Kethu Peyarchi Rasi palangal, i.e. how this Jupiter Transit will impact you from Juli 2017

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

Also Read

2017 Horoscope – Vedic Astrology New Year Predictions

Annual Numerology Predictions 1 to 9 for 2017

Rahu ketu peyarchi 2017 Rasi palangal Overview in Tamil

Puthandu Rasi Palan Tamil New Year 2017 – Dhurmugi Varusham

PREDICTIONS ABOUT FUTURE OF INDIA AND THE WORLD

Daily HoroscopesWeekly HoroscopesMonthly Horoscopes

Chinese Zodiac Predictions for 2017

27 Nakshatra Rasi Palan for 2017 in Tamil Panchangam

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Sani Peyarchi Palangal in Tamil

Tamil Astrology

No comments