Mesham Tamil New Year Rasipalan 2015

0
ARIES MONTHLY HOROSCOPE

Mesham Tamil New Year Rasipalan 2015

Mesham Tamil New Year Rasipalan 2015

மேஷம்:தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2015

(அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) போகப் போக நன்மை! – 65/100

 

தங்கத்தின் தரம்கூட குறையலாம். ஆனால், உங்கள் நடத்தையின் தரம் என்றும் குறையாது. குடிசை வீட்டில் பிறந்தாலும் விண்ணை முட்டும் உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்கள் நீங்கள்தான். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தைரியம் கூடும். குழப்பங்கள் நீங்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறை மூலமாக பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணருவீர்கள். தன்கையே தனக்குதவி என்பதையும் அறிவீர்கள். 

செவ்வாயே உங்கள் ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு, முக்கிய கிரகம் எதுவுமே சாதகமாக அமையவில்லை. அதனால், எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையளிக்கும். ஆண்டுதொடக்கம் சுமாராக இருந்தாலும், நாட்கள்போகப் போக நன்மை அதிகரிக்கும். முக்கிய கிரகமான குருபகவான் 3-ம் இடமான மிதுனத்தில்இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. குருசாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வை பலன் நன்மை தரும். ஜூன் 13-ந் தேதி குருமிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார்.அங்கும் அவரால் நன்மை தர இயலாது.ராகு தற்போது 7-ம் இடமான துலாமில்இருக்கிறார்.

இதனால் வீட்டில் சில சிரமம் உருவாகும். ஆனால் ஜூன்21ல் ராகு துலாமில் இருந்து கன்னிற்கு மாறுகிறார். அவரால் நன்மை கிடைக்க ஆரம்பிக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் தீரும். முயற்சியில் இருந்து வந்த தடை அனைத்தும் விலகும்.கேது உங்கள் ராசியிலேயே இருப்பதால்எதிரி தொல்லை ஏற்பட்டுக் கொண்டிருக்கும். அவர் ஜூன் 21ல் மேஷத்தில் இருந்து மீனத்திற்குமாறுகிறார்.இதுவும் சிறப்பானதல்ல.சனி உங்கள் ராசிக்கு 7-ம் இடமானதுலாமில் உள்ளார்.

பொதுவாக இங்கு இருக்கும் போது சனி குடும்பத்தில் பல பிரச்னையை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். ஆனால், தற்போது சனி வக்கிரமாக உள்ளதால் கெடுபலன் நேராது. மாறாக, நன்மை ஓரளவு கிடைக்கும். டிச. 16ல் சனி துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். அஷ்டமத்தில் சனி பெயர்வதால், முயற்சியில் பல்வேறு தடை உருவாகும்.

பணப்புழக்கம் இருக்கும். அதே நேரம் செலவும் அதிகரிக்கும். சிக்கனம் தேவை.குருவின் பார்வையால் பொருளாதாரம் சீராகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வீடு, மனை வாங்கலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் போன்ற சுபங்கள்கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவர். ஜூலை மாதம் முதல் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிதடை படலாம். 

தொழில், வியாபாரம்: 

தொழில், வியாபாரம் சிறப்பாகநடக்கும். எதிரித் தொல்லை சற்று கட்டுக்குள்இருக்கும். ஆண்டின் முற்பகுதியில், அரசு வகையில் நன்மை கிடைக்கும். ஜூன்13-ந் தேதிக்கு பிறகு வியாபாரத்தில் முயற்சி தேவைப்படும். ஆண்டின் பிற்பகுதியில் அரசு வகையில் நன்மை உண்டாகாது.வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக்கொள்ளவும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். ஜூன் 21-ந் தேதிக்குபிறகு எடுத்தகாரியத்தில் வெற்றி உண்டாகும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும்.வியாபார ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டிய நிலை வரும். ஜூலை மாதத்திலிருந்து தொழிலில் நிம்மதியும், லாபமும் கிடைக்கும்.

பணியாளர்கள்:  

வேலைப்பளு அதிகரிக்கும். சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போலீஸ் மற்றும்பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள்முன்னேற்றம் காண்பர். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதேபோல் வேலை இன்றி இருப்பவர்கள் ஆண்டின்தொடக்கத்திலேயே முயற்சிசெய்து வேலையை தேடிக் கொள்வது நல்லது.  ஜூலை மாதத்திலிருந்து உங்களுடைய உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உதாசீனப்படுத்தப்பட்ட உங்களுக்கு மரியாதைக் கூடும். அதிகாரிகளின் மனசு மாறும். தொந்தரவு கொடுத்து வந்த அதிகாரி இடம் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. சம்பள பாக்கியும் கைக்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நல்ல திருப்பு முனை உண்டாகும். 

கலைஞர்கள்

முற்பகுதி உங்களுக்கு தொந்தரவு தந்தாலும் பிற்பகுதியில் நல்ல வாய்ப்புகள் வரும். பெரிய நிறுவனத்திலிருந்தும் அழைப்பு வரும்.ஒப்பந்தம் கிடைக்க சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். திறமை வெளிப்படுவதோடு, சமூகத்தில் புகழ், செல்வாக்கிற்குகுறைவிருக்காது.அரசியல்வாதிகள்: சீரான நிலையில் இருப்பர்.  பலனை எதிர்பாராமல் பிறருக்கு உழைக்க வேண்டியதிருக்கும்.  

மாணவர்கள்:

ஆண்டு முழுவதும் சீரான பலனைக் காணலாம். சற்று முயற்சி எடுத்தால் சிறப்பான வெற்றி கிடைக்கும்.  விடாமுயற்சியுடன் படிக்க வேண்டியதிருக்கும்.விவசாயிகள்: செலவு அதிகரிக்கும் பயிர் வகைகளைத் தவிர்க்கவும். அக்கறையுடன் உழைப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகபலன் இருக்காது. படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விடைகளை எழுதிப்பாருங்கள். விளையாடும்போது சின்னச் சின்ன காயங்கள் ஏற்படக்கூடும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள்.

பெண்கள்:  

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியை பெறுவர். ஜூலை மாதத்திலிருந்து கல்வியில் ஆர்வம் பிறக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை கிடைக்கும். வருடத்தின் இறுதிப் பகுதியில் திருமணம் கூடி வரும்.உடல் நலம் சிறப்பாக இருக்கும். கண் தொடர்பான உபாதை உண்டாகலாம்.

அரசியல்வாதிகளே!

எதிர்க் கட்சியினரை விட நீங்கள் இருக்கும் கட்சியில் உங்களுக்கு எதிர்ப்புகள் இருக்கும். சகாக்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

விவசாயிகளே!

வருடத்தின் பிற்பகுதியில் மகசூல் பெருகும். வருமானம் உயரும். இந்தப் புத்தாண்டு முற்பகுதி பாகற்காயாக இருந்தாலும் பிற்பகுதி பனங்கற்கண்டாக இனிக்கும். 

 

மேலும் – புத்தாண்டுப் பலன்கள்

Also Read

Daily Horoscopes

Monthly Horoscope Overview for April 2015

2015 New Year Predictions (New Year Rasi Palan) – Vedic Astrology

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal) 

Annual Numerology Predictions 1 to 9 for 2015

You may also like

Sani Peyarchi Palangal in Tamil (சனி பெயர்ச்சி பலன்கள்)

27 Nakshatra Rasi Palan for 2015 in Tamil Panchangam

Tamil Astrology (தமிழ் அஸ்டாரலஜி)

Subscribe for Alerts

 

 

No comments

Eli Movie Review

Vadivelu is probably the only comedian in decades to enjoy immense popularity and loyal following  from toddlers to senior citizens in all classes of audiences.  ...