Rajinikanth Pays Tribute To His Guru K Balachander

0
கே.பி. சாருடைய இழப்பு என்னை நானே இழந்தது மாதிரி இருக்கு! ரஜினி கண்ணீர்!

 

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட இயக்குநர் கே.பாலச்சந்தர் செவ்வாய்க்கிழமை இரவு 07.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் கே.பாலச்சந்தரின் உடலுக்கு திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்திவிட்டு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே இருந்தார்.
பின்னர் வெளியே காந்திருந்த செய்தியாளர்களை சந்தித்த ரஜினி,
கே.பி. சாருடைய மறைவு கலையுலகத்திற்கே மிகப்பெரிய கஷ்டமாக அமைந்திருக்கிறது. அதுவும் எனக்கு ஒரு குரு மட்டுமல்ல. என்னுடைய அப்பா மாதிரி. என்னுடைய வழிகாட்டி. என் முன்னாடியே மனித ரூபத்தில் வாழ்ந்துக்கொண்டிருந்த கடவுள் அவர். என்னை அவர் பையனாகத்தான் பார்த்தாரேயொழிய நடிகனாக பார்க்கவில்லை. அவரை நான் இழந்தது, அவருடைய இழப்பு என்னை நானே இழந்தது மாதிரி இருக்கு. என்னால வார்த்தையில சொல்ல தெரியல. இன்னொரு கே.பி. சாரை திரையுலகத்தில பார்க்க முடியாது. அவருடைய ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் என கண் கலங்கியபடியே பேட்டியை முடித்துக்கொண்டார்
http://www.nakkheeran.in/

Kamal Haasan and Rajinikanth’s guru K Balachander passes away

K Balachander, Legendary Tamil Director, Dies at 84

No comments